Monday, January 29, 2007

சாய்பாபாவின் விபூதி மாயாஜாலம்! - ஒரு பகீர்

ஒரு வாரமா புதுப்பேடடை தனுஷ் மாதிரி, "எங்க ஏரியா உள்ள வராத..."ன்னு கத்தி பாடணும் போல இருக்கு, காரணம், இந்த சாய்பாபா தான்!

ஏதோ யாகம் பண்றேன்னு, திருவான்மியூர் ஏரியாவையே ஆக்ரமிச்சுட்டாரு! சரி அப்படி என்ன தான் பண்றாருன்னு, போயிட்டு வந்த ஒரு கோயிந்து கிட்ட கேட்டேன்.

உடனே, அவரு நல்லவரு, வல்லவரு, நாலும் தெரிஞவரு, கலியுக புத்தரு, மிகப்பெரிய சித்தரு, வெறுங்கையில விபூதி வரவைப்பாரு அப்படின்னாரு.

ஆஹா! ன்னு நம்ம தெரிஞவருகிட்ட்யிருந்த் இந்த வீடியோவை வாங்கி, கோயிந்து கிட்ட போடு காட்டினேன்! Computer Graphics வேலை இது! நான் நம்ப மாட்டேன்னுட்டாரு!

நீங்களே பார்த்து சொல்லுங்க, உண்மையை!குறிப்பு: நான் கடவுள் மறுப்பாளன் அல்ல! ஆனால் கடவுள் பெயரால் செய்யும் மோசடிகளுக்கு ஆட்படுபவன் அல்ல!

9 comments:

சிறுதுளி said...

அண்ணன் விடாது கருப்புக்கு அருமையன தீனி......சாய்பாபா பக்த கோய்ந்துகளூக்கு.........பிரசாதம்.....

ecr said...

நன்றி எட்வர்ட்டு!

கலைஞர் வீட்டுக்கு பாபா போனதை பத்தி என்ன நினைக்கிறீங்க?

hai said...

''குறிப்பு: நான் கடவுள் மறுப்பாளன் அல்ல! ஆனால் கடவுள் பெயரால் செய்யும் மோசடிகளுக்கு ஆட்படுபவன் அல்ல! ''
நானும்தான்.ஆனால் இரண்டுதிராவிட அரசுகள் இத்தனைக்காலன் ஆட்சியிலிருந்தும் சாதிக்க முடியாததை ஒரு மடாதிபதி செய்து காட்டி விட்டாரே.[சாய்-கங்கா திட்டம்].நம்மூர் ஆட்கள் இடத்த கொடுத்தா மடத்த் கேட்கிறவங்க..கூவத்தையும் சுத்தப் படுத்தனுமாம்...இவர்களின் சித்துக்கு அவருடையது தேவலாம்

வெற்றி said...

ஒளிப்படத்துக்கு மிக்க நன்றி.

ecr said...

தமிழச்சி!

எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் அவர்கள் செய்யும் நல்ல காரியங்களை மட்டும் பார்ப்பதே தமிழர் பண்பாடு! இந்த ஒரு குணத்தை(வீக்னெஸ்)பயன்படுத்தி பலரும் நம்மை ஏமாற்றி வருகிறார்கள்! ஏற்கனவே ஆந்திராவையும் கர்நாடகத்தையும் தன் சித்து மோசடிகளால் வளைத்துப்போட்ட சாய்பாபா தற்போது தமிழகத்தை குறி வைத்துள்ளார்!
அவரின் வலையில் படித்தவர்களும் விழுவதற்கே இந்த தானமெல்லாம். ஆமாம், அவர் கொடுத்ததென்ன அவருடைய சொந்த பணமா?

சின்ன மீனைப்போட்டு பெரிய மீனை பிடிக்க திட்டமிட்டுள்ளார் பாபா! தயவு செய்து ஏமாறவேண்டாம்

ecr said...

நன்றி வெற்றி!

உங்களோட யாழ் சொற்கள் பதிவி நல்லாயிருக்கு. மேலும் சொற்கள் சேருங்களேன்!

விடாதுகருப்பு said...

அருமை அருமை நண்பரே...

அந்த பரட்டைப் பயலின் உண்மை முகத்தினை படம் போட்டு விளக்கி இருக்கிறீர்கள்.

பரட்டையின் இன்னுமொரு ப்ரேமானந்தசாமி!

ecr said...

நன்றி கருப்பு அவர்களே!

இதே போல லிங்கம் வரவழைப்பது, தங்கசெயின், மோதிரம் மேட்டரெல்லாம் கூட வீடியோ ஆதாரத்தோட youtubeல் இருக்கு!

இதப்பார்த்தாவது நம்ம ஆளுங்க திருந்த மாட்டாங்களான்னு ஒரு நம்பிக்கை தான்!

ecr said...
This comment has been removed by a blog administrator.