Tuesday, November 21, 2006

நாணயம் தவறியது யார்?

தமிழ் தினசரிகளை படித்து வருபவர்கள் சமீபகாலமாக ஒரு விளம்பரத்தை பார்த்திருக்கலாம்.

அது, "நாணயம் தவறிய கடன்தாரர்கள்" என்ற தலைப்பில் State Bank of India வால் வெளியடப்பட்டது. அதில் கடன் வாங்கி பணம் கட்டத்தவறியவர்களின் பெயர், முகவரி, வாங்கிய மற்றும் பாக்கி தொகையுடன் புகைப்படமும் இருக்கும். இதை பார்த்தவுடன் நான் "சரி, நம் வங்கிகள் உஷாராகி விட்டன, இனிமேல் யாரும் வங்கிகளை யாரும் ஏமாற்றி தப்பிவிட முடியாது" என நினைத்தேன்.

ஆனால், அவற்றை உற்று பார்த்த பிறகு தான் இந்த வங்கியின் உண்மையான முகம் எனக்கு தெரிந்தது. இதில உள்ளவர்கள் யாரும் லட்சக்கணக்கிலோ, கோடிக்கணக்கிலோ, மோசடி செய்தவர்களும் இல்லை. ஊரை விட்டு ஓடுபவர்களும் இல்லை(ஏனென்றால், இவர்கள் வாங்கிய தொகை அப்படி) !

அரசு மற்றும் தனியார் துறை கடைநிலை ஊழியர்கள், ஆசிரியர்கள், நர்சுகள், மற்றும் சிறிய சுயதொழிலில் ஈடுபட்டுள்ளோரே இந்த listல் உள்ளனர். ஏதோ அவசரத்திற்காக வங்கியில் பர்சனல் லோன் எடுத்து, முக்கால்வாசிக்குமேல் கட்டியபின் நிலைமை சரியில்லாமல் தவறிய்து போல்தான் எனக்கு தெரிந்தது.

இவர்களுக்கு இப்படி ஒரு தண்டனையா? அதுவும் விசாரணையே இல்லாமல்? கொடுத்த கடனை வசூலிக்க எவ்வளவோ வழிகள் இருக்கும் பொழுது இவ்வளவு பாரம்பரியமுள்ள வங்கி இப்படி செய்யலாமா? ஈட்டிக்காரன் போல் சத்தம் போடுவது அழகா?

சரி, இப்படி கடனை திருப்பி கட்டாதவர்கள் மேலெல்லாம் நடவடிக்கை எடுக்க துணிச்சல் இருக்கிறதா இவர்களுக்கு? MLA, MP, மந்திரி, IAS, சினிமாக்காரர்கள், அரசியல்வாதிகள் என கடன் தவறியவர்கள் பட்டியல் மைல் கணக்கில் நீளுமே, அவர்கள் படத்தை இப்படி போடும் தைரியம் உண்டா இவர்களிடம்?

இப்படி ஒரு கேவலமான விளம்ரத்தை காசுக்காக பிரசுரம் செய்யும் இந்த பத்திரிக்கைகாரர்களுக்கு அறிவே இல்லையா?

தமிழ்நாடு தவிர வேறெந்த மாநிலத்திலேயும் இப்படி ஒன்று நடந்திருந்தால், அந்த வங்கி அங்கே தொழில் செய்ய முடியுமா?

மானமுள்ள தமிழர்களே! சற்று சிந்திப்பீர்!

குறிப்பு: எனக்கு எந்த வங்கியிலேயும் கடன் இல்லை!