Sunday, August 27, 2006

சென்னை பிரியாணி!

மெரினா, கண்ண்கி சிலை, lic building, இப்படி பல சிறப்பு விஷயங்கள் இருந்தாலும், யாருமே பேசாத சிறப்பு சென்னையோட பிரியாணி தான்.

புதுசா இருக்கா? மேல படிங்க!

ஹைதராபாத் பிரியாணி, தலப்பாகட்டு பிரியானி, ஆம்பூர் பிரியாணி, மொகல் பிரியாணி, செட்டிநாட்டு பிரியாணி, இப்படி பலவிதமான பிரியாணிகள் இருக்கு. அத்தனை வகையான பிரியாணியும் கிடைக்கக்கூடிய ஒரே ஊர் நம்ம சென்னை தான்.

காலை 7 மணியிலிருந்து நடு ராத்திரி வரைக்கும் சூடாக பிரியாணி போடும் கடைகளை முற்றுகயிடுகிறார்கள் சென்னைவாசிகள். 10 ரூபாயிலிருந்து 70 ரூபாய் வரைக்கும் விதவிதமான பிரியாணி சாப்பிடுகிறார்கள் இவர்கள்(425/- + tax கொடுத்து ஸ்டார் ஓட்டலில் சாப்பிடுபவர்களை சேர்த்து கொள்ள மாட்டேன்).

ஆடு,மாடு,கோழி, காடை, வான்கோழி, முயல், மீன், இறால் என எந்த ஜீவராசிகளையும் விட்டுவைப்பதில்லை(எதையாவது மறந்திருந்தா சொல்லுஙக).


ரெட்ஹில்ஸ் முதல் தாம்பரம் வரைக்கும் ஒவ்வொரு ஏரியாவிலும் சக்கை போடு போடுகிறார்கள் இவர்கள். இந்த ஏரியா மொத்தமும் இல்லையென்றாலும் முக்கால்வாசி இடத்தில் சாப்பிட்டவன் நான். அதற்காக, பிரியாணி சாப்பிடத்தான் இந்த இடமெல்லாம் போனேன் என்று நினைக்காதீர்கள். என் தொழில் அப்படி.

ஒவ்வொரு ஊரிலும், சிறந்த இடம் எதுவென்று பட்டியலே போட்டு வைத்திருக்கிறேன்.


அது அடுத்த பதிவில்!

வேட்டையாடு விளையாடு - என் பார்வை

எல்லாருக்கும் வணக்கம்!

பல தடைகளை தாண்டி திரைக்கு வந்திருக்கும் வே.வி பார்த்தேன்.

நிற்க.நான் ஒரு சினிமா விமர்சகனோ, சினிமாக்காரனோ இல்லை. அதனால், ஓசியிலோ சிடியிலோ பார்க்காமல், 100 ரூபாய் கொடுத்து தியேட்டரில் தான் பார்த்தேன்.

பொதுவாக, நம்ம சினிமாவுல ரெண்டு விதமான போலீசை தான் காட்டுவாங்க. 1. நேர்மையான, எதுக்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்படுகிற போலிஸ், 2.லஞசம் வாங்குகிற ரவுடி போலிஸ்.

இந்த மாதிரியான போலித்தனம் எதுவுமில்லாமல் நிஜமான போலீஸ் வாழ்க்கையை காண்பிக்கும் படம் தான் வே.வி.

குருதிப்புனல், காக்க காக்க இவ்விரண்டு படங்களோடு ஒப்பிடுவது தவிர்க்க முடியாத ஒன்று என்றாலும் கூட இது போன்ற ஒரு Crime Thriller , இது போன்ற styleல் தமிழில் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

DCP(crime) Raghavan IPS ஆக கமல். டிஜிட்டல் கேமரா, MotoRazr செல் போன், லேப்டாப் என ஹை-டெக் சமாச்சாரங்களை உப்யோகப்படுத்தினாலும், போலீசுக்கே உரிய உள்ளுணர்வயும், வாரண்ட் இல்லாமல் உள்ளே நுழைந்து ஆளை தூக்க நினைக்கும் அதிரடி இபிஎஸ்.

எனக்கு நினைவு தெரிந்து நான் பார்த்த முதல் படம் 'சகலகலா வல்லவன்' . அன்றிலிருந்து இன்று வரை அதே ஆச்சரியத்தோடு நான் அவரை பார்க்கிறேன். ஐம்பது வயது கடந்த பின்னும் சண்டைகாட்சிகளில் மிரட்டுகிறார்.

மனைவி சாவுக்கு, அவர் உணர்ச்சிகளை அள்ளி கொட்டாமல், 'துக்கம் தொண்டையை அடைக்கிறது என்று சொல்வோமே, அந்த உணர்வை ஒரே ஒர் வினாடியில் காண்பித்து விடுகிறார்.

பல வருடங்களுக்கு பிறகு, கமல் ரசிகர்களுக்கு ஒரு ஆக்க்ஷன் விருந்து.

ஆங்கில படங்அளுக்கு இணையான தொழில்நுட்ப நேர்த்தி, திரைக்கதை இருந்தும் படத்தின் மைனஸ், இயக்குநரின் 'காக்க காக்க' Hangover தெரிவது தான். அதை தவிர்த்திருக்கலாம்.
ஹீரோயினை உயிரோடு விட்டு வைப்பதா, இல்லையா என கடைசி வரை முடிவெடுக்கவில்லையென நினைக்கிறேன். கடைசி காட்சி, படத்தோடு ஓட்டவில்லை. கமல் ரசிகர்களை திருப்திப்படுத்தவாவது ஒரு Solo song வைத்திருக்கலாம்.

பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் போனால், நிச்சயம் கைகொட்டி ரசிக்கலாம்!

முதல் வணக்கம்


எல்லாருக்கும் வணக்கம்!

இந்த வலை உலகத்துக்கு நான் புதுசு!

இந்த blogக்கு ரோடரம்னு பேர் வச்சதுக்கு specialஆ எந்த காரணமும் இல்லை!

கேரளா போயிருந்தப்ப சோடடானிக்கரை பக்கத்துல பார்த்த ஓரு டீ கடையோட பேர் தான் இது. நல்லா இருந்தது( கடையும், டீயும், பேரும்)

எத்தனையோ ஊரு போயிருப்போம், எத்தனையோ இடங்களை, கடைகளை, ம்னிதர்களை பார்த்திருப்போம். ஆனால், சில பெயர்கள் தான் நம்ம ஞாபகத்துல இருக்கும். அது போல நான் பார்த்த, ஞாபகத்துல இருக்கிற விஷயங்களை உங்களோட பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.

படிச்சிட்டு உங்களோட கருத்தை சொல்லுங்க!

நன்றி!