Monday, December 25, 2006

வைகோ ஒரு சிறந்த தலைவரா?சமீபத்தில், தமிழ்மணத்தில், இந்த பதிவை படித்தேன்

"வைகோவின் வீழ்ச்சியா? எழுச்சியா?"- தமிழச்சி
http://thamizhachi.blogspot.com/2006/12/blog-post_22.html

இவருக்கு நான் எழுதிய பதிலை, கீழே பதிவாக அளித்திருக்கிறேன்!

தமிழச்சி!
உங்களுடைய சிந்தனையும், செயலும் அப்படியே வைகோவைப்போல் இருக்கிறது!
அதாவது, சொல்லும் கருத்தில் ஆழமில்லாவிட்டலும், அதை கோர்வையாகவும், அழகாகவும் சொல்லுகிறீர்கள்!

தலைவனுக்குரிய முக்கியமான குணம், அனைவரின் ஆலோசனையும் கேட்டபின் சொந்த முடிவை எடுப்பதே ஆகும்! அதேபோல, தன்னைவிட அதிகமாக கழகத்தையும், கழகத்தைவிட அதிகமாக தாய்நாட்டையும் நேசிக்க வேண்டும்! பொறாமை படுதலோ, உணர்ச்சிவசப்படுதலோ கூடாது

இந்த குணங்கள் அனைத்துமே திரு.வைகோ அவர்களுக்கு குறைவுதான்!

உதாரணங்கள்:

1. நீங்களே சொன்னதுபோல், பிறருடய ஆலோசனைக்கிணங்கி, அதிமுகவுடன் கூட்டு வைத்தது( கோடிக்கணக்கில் பணம் கைமாறியதாக கூறப்பட்டாலும், அதை இப்போதைக்கு ஒதுக்கிவைப்போம்!)ஒரு பொறுப்பான தலைவனின் செயல் தானா அது?

2. இந்திய நாட்டின் மக்களவை உறுப்பினராக(MP) இருக்கும்போதே, விசா இல்லாமல் கள்ளத்தனமாக ஈழம் சென்றது! குறைந்தபட்சம் கட்சித்தலைவருக்காவது சொல்லி இருக்கலாம். ஏன் சொல்லவில்லை? இவர் ஈழத்துக்கு போனதால் அங்கே அமைதி பூத்துவிட்டதா?

3.கட்சியின் கடைக்கோடி தொண்டன் கூட தலைவனாக ஆசைப்படலாம் தவறில்லை! ஆனால் அப்பதவிக்கு தகுந்தவனாக தன்னை உயர்த்திக்கோள்ள வேண்டுமே தவிர தலைவனைவிட தான் உயர்ந்தவன் என்று அடிக்கடி அறிவித்துக்கொண்டே இருக்கக்கூடாது! தலைமையின் வாரிசாக காட்டிக்கொண்டிருப்பவரை வெல்வதற்கு முக்கியம், சமயம் வரும்வரை கட்சியிலேயே இருப்பதுதான்! அதே போல பகைவனையும் நண்பனாக்கும் சாதுர்யம் வேண்டும்!அந்த சாமர்த்தியம் கூட இல்லாதவரை எப்படி தலைவராக ஏற்றுக்கோள்வது?

4.வைகோவினுடைய மிகப்பெரிய பலவீனம் அவர் அடிக்கடி உணர்ச்சிவசப்படுவதுதான்! "உணர்ச்சி இல்லாதவன் சொந்த வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும் முன்னுக்கு வர மூடியாது என்றாலும், அதை கட்டுப்படுத்த தெரியாதவன் சிறந்த மனிதனாகவோ, தலைவனாகவோ வரமுடியாது"(சத்தியசோதனையில் மகாத்மா காந்தி சொன்னது)

என்ன, உண்மை சுடுகிறதா?

குறிப்பு: நான் எல்.ஜி. குழுவிற்கு வக்காலத்து வாங்கவில்லை! அவர்களின் பதவி வெறி பல்லிளிப்பு பார்ப்பதற்கே கேவலமாக இருக்கிறது!

Saturday, December 23, 2006

சென்னயில் சிவாஜி படப்பிடிப்பு!
ஹைதரபாத், ஸ்பெயின், புனே என சுற்றித்திரிந்த "சிவாஜி" படப்பிடிப்பு குழுவினர் கடைசியாக நேற்று வந்து சேர்ந்த இடம், நம்ம சிங்காரச்சென்னை தான்!

அண்ணா சாலை மேம்பாலத்தில், நேற்று நள்ளிரவு ஆயிரக்கணக்கான கார்களை நிறுத்தி ட்ராபிக் ஜாம் ஆனதுபோல் செட்டப் செய்யப்பட்டது!

இன்று இரவும் இந்த படப்பிடிப்பு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது!