Sunday, August 27, 2006

சென்னை பிரியாணி!

மெரினா, கண்ண்கி சிலை, lic building, இப்படி பல சிறப்பு விஷயங்கள் இருந்தாலும், யாருமே பேசாத சிறப்பு சென்னையோட பிரியாணி தான்.

புதுசா இருக்கா? மேல படிங்க!

ஹைதராபாத் பிரியாணி, தலப்பாகட்டு பிரியானி, ஆம்பூர் பிரியாணி, மொகல் பிரியாணி, செட்டிநாட்டு பிரியாணி, இப்படி பலவிதமான பிரியாணிகள் இருக்கு. அத்தனை வகையான பிரியாணியும் கிடைக்கக்கூடிய ஒரே ஊர் நம்ம சென்னை தான்.

காலை 7 மணியிலிருந்து நடு ராத்திரி வரைக்கும் சூடாக பிரியாணி போடும் கடைகளை முற்றுகயிடுகிறார்கள் சென்னைவாசிகள். 10 ரூபாயிலிருந்து 70 ரூபாய் வரைக்கும் விதவிதமான பிரியாணி சாப்பிடுகிறார்கள் இவர்கள்(425/- + tax கொடுத்து ஸ்டார் ஓட்டலில் சாப்பிடுபவர்களை சேர்த்து கொள்ள மாட்டேன்).

ஆடு,மாடு,கோழி, காடை, வான்கோழி, முயல், மீன், இறால் என எந்த ஜீவராசிகளையும் விட்டுவைப்பதில்லை(எதையாவது மறந்திருந்தா சொல்லுஙக).


ரெட்ஹில்ஸ் முதல் தாம்பரம் வரைக்கும் ஒவ்வொரு ஏரியாவிலும் சக்கை போடு போடுகிறார்கள் இவர்கள். இந்த ஏரியா மொத்தமும் இல்லையென்றாலும் முக்கால்வாசி இடத்தில் சாப்பிட்டவன் நான். அதற்காக, பிரியாணி சாப்பிடத்தான் இந்த இடமெல்லாம் போனேன் என்று நினைக்காதீர்கள். என் தொழில் அப்படி.

ஒவ்வொரு ஊரிலும், சிறந்த இடம் எதுவென்று பட்டியலே போட்டு வைத்திருக்கிறேன்.


அது அடுத்த பதிவில்!

7 comments:

G Gowtham said...

புதியவருக்கு வரவேற்பு வாழ்த்துக்கள்!
மதுரைப்பக்கம் பிரியாணி சாப்பிட்டுப் பழகி இங்கே சென்னையில் வாய் ருசிக்கலை! :-(

Anu said...

welcome...to blog world.
Just saw your post.
Keep writing.

Anonymous said...

எழுதுங்க.... ரொம்ப உபயோகமாக இருக்கும் :-)

Anonymous said...

பிரியாணி சாப்ட்ட போதையில் கொஞ்சம் ஓவர் பில்டப் கொடுத்துவிட்டதாக கூறும் மூத்த பிரியாணி ப்ரியர் திரு.ஸங்கர்,7 மணிக்கு பிரியாணி விற்கும் சென்னை கடை எது என்று கேட்கிறார்,முகவரி தரவும்.

Anonymous said...

பிரியாணி சாப்ட்ட போதையில் கொஞ்சம் ஓவர் பில்டப் கொடுத்துவிட்டதாக கூறும் மூத்த பிரியாணி ப்ரியர் திரு.ஸங்கர்,7 மணிக்கு பிரியாணி விற்கும் சென்னை கடை எது என்று கேட்கிறார்,முகவரி தரவும்.

Divya said...

பிரியாணி பிரியரா நீங்கள்? அருமையாக எழுதுகிறீர்கள், வாழ்த்துக்கள்.

ecr said...

அனைவருக்கும் நன்றி!

பிரியாணி கடையின் கதவிலக்கம், Post Box No எல்லம் குறித்து வைக்கும் பழக்கம் எனக்கில்லை, ஆனாலும் சொல்கிறேன் புளியந்தோப்பு ஆட்டுதொட்டி பக்கத்தில் காலை 7 மணிக்கு சூடான பிரியாணி கிடைக்கும்!