Monday, December 25, 2006

வைகோ ஒரு சிறந்த தலைவரா?சமீபத்தில், தமிழ்மணத்தில், இந்த பதிவை படித்தேன்

"வைகோவின் வீழ்ச்சியா? எழுச்சியா?"- தமிழச்சி
http://thamizhachi.blogspot.com/2006/12/blog-post_22.html

இவருக்கு நான் எழுதிய பதிலை, கீழே பதிவாக அளித்திருக்கிறேன்!

தமிழச்சி!
உங்களுடைய சிந்தனையும், செயலும் அப்படியே வைகோவைப்போல் இருக்கிறது!
அதாவது, சொல்லும் கருத்தில் ஆழமில்லாவிட்டலும், அதை கோர்வையாகவும், அழகாகவும் சொல்லுகிறீர்கள்!

தலைவனுக்குரிய முக்கியமான குணம், அனைவரின் ஆலோசனையும் கேட்டபின் சொந்த முடிவை எடுப்பதே ஆகும்! அதேபோல, தன்னைவிட அதிகமாக கழகத்தையும், கழகத்தைவிட அதிகமாக தாய்நாட்டையும் நேசிக்க வேண்டும்! பொறாமை படுதலோ, உணர்ச்சிவசப்படுதலோ கூடாது

இந்த குணங்கள் அனைத்துமே திரு.வைகோ அவர்களுக்கு குறைவுதான்!

உதாரணங்கள்:

1. நீங்களே சொன்னதுபோல், பிறருடய ஆலோசனைக்கிணங்கி, அதிமுகவுடன் கூட்டு வைத்தது( கோடிக்கணக்கில் பணம் கைமாறியதாக கூறப்பட்டாலும், அதை இப்போதைக்கு ஒதுக்கிவைப்போம்!)ஒரு பொறுப்பான தலைவனின் செயல் தானா அது?

2. இந்திய நாட்டின் மக்களவை உறுப்பினராக(MP) இருக்கும்போதே, விசா இல்லாமல் கள்ளத்தனமாக ஈழம் சென்றது! குறைந்தபட்சம் கட்சித்தலைவருக்காவது சொல்லி இருக்கலாம். ஏன் சொல்லவில்லை? இவர் ஈழத்துக்கு போனதால் அங்கே அமைதி பூத்துவிட்டதா?

3.கட்சியின் கடைக்கோடி தொண்டன் கூட தலைவனாக ஆசைப்படலாம் தவறில்லை! ஆனால் அப்பதவிக்கு தகுந்தவனாக தன்னை உயர்த்திக்கோள்ள வேண்டுமே தவிர தலைவனைவிட தான் உயர்ந்தவன் என்று அடிக்கடி அறிவித்துக்கொண்டே இருக்கக்கூடாது! தலைமையின் வாரிசாக காட்டிக்கொண்டிருப்பவரை வெல்வதற்கு முக்கியம், சமயம் வரும்வரை கட்சியிலேயே இருப்பதுதான்! அதே போல பகைவனையும் நண்பனாக்கும் சாதுர்யம் வேண்டும்!அந்த சாமர்த்தியம் கூட இல்லாதவரை எப்படி தலைவராக ஏற்றுக்கோள்வது?

4.வைகோவினுடைய மிகப்பெரிய பலவீனம் அவர் அடிக்கடி உணர்ச்சிவசப்படுவதுதான்! "உணர்ச்சி இல்லாதவன் சொந்த வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும் முன்னுக்கு வர மூடியாது என்றாலும், அதை கட்டுப்படுத்த தெரியாதவன் சிறந்த மனிதனாகவோ, தலைவனாகவோ வரமுடியாது"(சத்தியசோதனையில் மகாத்மா காந்தி சொன்னது)

என்ன, உண்மை சுடுகிறதா?

குறிப்பு: நான் எல்.ஜி. குழுவிற்கு வக்காலத்து வாங்கவில்லை! அவர்களின் பதவி வெறி பல்லிளிப்பு பார்ப்பதற்கே கேவலமாக இருக்கிறது!

8 comments:

நாடோடி said...

வாடகை ஒலிபெருக்கி (!) வைகோ என்றுமே தலைமைப் பொறுப்புக்கு தகுதியானவராக இருந்ததில்லை. அவர் ஒரு சிறந்த பேச்சாளர், மிகச் சிறந்த நாடாளுமன்றவாதி.மறுப்பதற்கில்லை. ஆனால் அது மட்டுமே தலைமைப் பொறுப்பிற்கு உதவாது.தெளிவான சிந்தனைகள் , உணர்ச்சி வசப்படாத பேச்சு, அதற்கும் மேலாக சுயமான
முடிவுகள் ,இதில் எதுவுமே அவரிடம் இல்லை.

தேறான் தெளிவும் தெளிந்தான்கன் ஐயுறவும் தீரா இடும்பை தரும்.. அய்யன் வள்ளுவன் சொன்னது...

hai said...

நன்றி இசிஆர்
மனிதர்களில் யாரும் மகாத்மா கிடையாது.உணர்ச்சிகளுக்கும் சூழ்நிலைகளுக்கும் ஆட்படுபவந்தான் மனிதன்.அரசியல் ஒரு சாக்கடையாகி விட்ட இந்த நாளில் யாருமே யோக்கியர் இல்லை.ஆனால் யார் அ.தி.மு.க இணைப்புக்கு காரணமோ அவர்களே இன்று ஞாயம் பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போன்றது.இந்த பின்னாலிருந்து குழிபறிக்கும் வேலை நிச்சயம் அவரிடம் இல்லை[இலங்கை சென்றதை இத்துடன் ஒப்பிடாதீர்].நான் அறிந்தவரை ஒரு நல்ல அரசியல் வாதி காலச் சூழ்நிலைகளால் அலைக்கழிக்கப் படுவதால் மனம் வருந்தி இந்த பதிவு.கருத்து சொல்ல யாருக்கும் உரிமையுண்டு.ஆனால் நான் எந்த விவாத களத்திற்கும் தயாரில்லை.

hai said...

\\தலைமையின் வாரிசாக காட்டிக்கொண்டிருப்பவரை வெல்வதற்கு முக்கியம், சமயம் வரும்வரை கட்சியிலேயே இருப்பதுதான்! அதே போல பகைவனையும் நண்பனாக்கும் சாதுர்யம் வேண்டும்!அந்த சாமர்த்தியம் கூட இல்லாதவரை எப்படி தலைவராக ஏற்றுக்கோள்வது?//

அடடா இத்தான் முதுகில் குத்தும் இராஜ தந்திரமோ? நிச்சயமாய் வைகோவிற்கு தெரியாது.
நேருக்கு நேர் பேசுவதால்தான் பிடிக்காமல் போகிறது.
உங்களுக்கு தெரியுமா தொண்டர்களை மதிக்கும் ஒரு[ரே] தலைவர்

ecr said...

தமிழச்சி!

எல்.ஜி பற்றிய உங்கள் கருத்துக்களை நான் ஆமோதிக்கிறேன்!

ஆனால்,
'புரட்சிப் புயல்' பூக்கும்....நாடாளும்....'மறுமலர்ச்சி' பிறக்கும்' என்று நீங்கள் எழுதிய கருத்து எனக்கு ஏற்புடையதாக இல்லை! அதை தெரிவிக்கவே, இந்த பதிவு!

ecr said...

நன்றி நாடோடி!

"வாடகை ஓலிபெருக்கி" - அருமையான வார்த்தைபிரயோகம்!

நாடளுமன்றவாதி என்றவுடனே என் நினைவுக்கு வரும் ஒரு சம்பவம் - மக்களவையில் பொடா மீதான தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது, "Why This Country needs POTA?" (இந்த நாட்டுக்கு பொடா ஏன் தேவை?)என்ற தலைப்பில் சுமார் 3 மணிநேரம் வாதாடினார் வைகோ.

அதே வாயால், தான் பொடா கைதான பின் "பொடா ஒரு கொடுங்கோல் சட்டம்" என்று சொல்லி தான் அப்போதிருந்த திமுக கூட்டணிக்கு வாக்கு கேட்டார்.

ecr said...

தமிழச்சி!

தலைமைக்கும் வாரிசுக்கும் உள்ள வேறுபாட்டை தாங்கள் புரிந்துகொள்ளவில்லை!

கட்சி பலமாக இருந்தால்தான், தான் தலைவராக இருக்க முடியும் என்பதை பற்றிய புரிந்து வைத்திருப்பதால் தான் வைகோவிற்கு பிறகு அரசியலுக்கு வந்தவர்கள் கூட அவரைவிட அதிகமாக மக்கள் ஆதரவை பெற்றிருக்கிறார்கள்!(வாக்கு%)

Anonymous said...

Please change the caption. You have asked as to whether Vaiko is a good leader instead you should ask as to whether he is a leder

ecr said...

அனானி,

நீங்கள் சொன்னபடி செய்தால், அவருக்கு பின்னால் நிற்கும் மதிமுக தொணடர்கள் வருத்தப்படுவார்கள்!

குறிப்பு: இந்த linkல் சொடுக்கி, ekalappai மூலம் தமிழில் எழுத ஆரம்பியுங்களேன்!
http://www.thamizmanam.com/resources.php